Contact Info

Sri Ram Power Systems
106H/2, 3rd Main Road, Toovipuram,
Tuticorin
Email: srirampowersystems@yahoo.com

Mobile: +91-9443174548
Home » Press Release

Press News

இன்வெர்ட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை


 

மின்சார தட்டுப்பாடு தமிழகத்தில் தலைவிரித்தாடும் இச்சமயத்தில், இன்வெர்ட்டர் விற்கும் நிறுவனங்களும், வியாபாரிகளும் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம், ஒரு மாதத்தில் 15 இன்வெர்ட்டர்களே விற்பனையான கடையில், இன்று ஐநூறுக்கும் மேற்பட்ட இன்வெர்ட்டர்கள் விற்பனையாகிறது. 

இந்நிலையில் புதிதாக இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, ஏற்கெனவே வைத்திருப்பவர்கள் அதை எப்படி பராமரிப்பது என்பது குறித்து ஸ்ரீராம் பவர் ஸிஸ்டம் நிறுவனத்தின் உரிமையாளர் ராமனாதனிடம் கேட்டோம்.

பொதுவாக இன்வெர்ட்டர்கள் எல்லாமே தானாக இயங்குபவை என்பதால், மின்சாரம் தடைபட்டவுடன் இயங்க ஆரம்பித்துவிடும். மின்சாரம் வந்ததும் அதன் இயக்கம் தானாகவே நின்று விடும். இன்வெர்ட்டரில் சார்ஜ் குறைந்துவிட்டால், மின்சாரத் திலிருந்து அதுவாகவே சார்ஜ் ஆகிக் கொள்ளும். இதனால் இன்வெர்ட்டர், பேட்டரி இரண்டையுமே கரன்ட் கனெக்ஷனில்தான் வைத்திருக்க வேண்டும்.

தற்போது மின் தடை நேரம் அதிகரித்திருப்பதால் பேட்டரி சார்ஜ் ஏறுவதில் சிரமம் ஏற்படுகிறது. அளவிற்கு ஏற்றவாறு ஒவ்வொரு பேட்டரிகளிலும் 10மணி நேரம் வரை சார்ஜ் ஏற்றுவதற்கு மின் சாரம் தேவை. ஆனால் தற்போது 3மணி நேரங்களுக்கு ஒருமுறை மின் தடை ஏற்படுவதால் பேட்டரியை 50சதவிகிதம் பயன் படுத்தினால் நல்லது. 

உதாரனமாக 800 வாட்ஸ் என்றால் 400 வாட்ஸ் மட்டுமே பயன்படுத்தவேண்டும். தேவையில்லாத சமயங்களில் இன்வெர்ட்டர் சுவிட்சை ஆஃப் செய்து வைத்துக் கொள்ளலாம். சிலர் காலை 9மணிக்கு வேலைக்கு செல்பவர்கள் மாலை 6 மணிக்கு வீட்டிற்கு வருவார்கள். நிறுவனங்கள் ஞாயிறு விடுமுறை என்றால் சுவிட்சை ஆஃப் செய்துகொள்வது நல்லது. இதனால் பேட்டரியின் லைஃப் கூடும்.மேலும் சார்ஜ் ஏற்றும் நேரமும் குறையும்.

இப்போது மின்தட்டுப்பாடு அதிகமிருந்தாலும்,இந்த பிரச்னை இன்னும் சில மாதம் கழித்து கொஞ்சம் தணியலாம். அந்த சமயத்தில், இன்வெர்ட்டரை பூட்டி, அப்படி ஒரு ஓரத்தில் வைத்து விடக் கூடாது. மாதம் ஒருமுறையேனும் கிடைக்கும் மின்சாரத்தை நிறுத்திவிட்டு, இன்வெட்டர் மின்சாரத்தை பயன்படுத்தினால் இன்வெட்டரும் பேட்டரியும் பழுதடையாமல் இருக்கும். பேட்டரியில் இருக்கும் டிஸ்டில்ட் வாட்டர் குறையும் பட்சத்தில், அதை கட்டாயம் நிரப்பி வைக்க வேண்டும்.இதை செய்யாவிட்டால், இன்வெட்டர் இயங்காது.

இன்வெர்ட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

தேவைக்குத் தகுந்தபடி இன்வெர்ட்டர் மாடல்களை தேர்வு செய்ய வேண்டும். 

மூன்று மணி நேரம் கரன்ட் கட் ஆகிற பகுதிகளில், அதற்கு ஏற்றார்போல மின்சாரத்தை சேமிக்கக் கூடிய பேட்டரிகளை தேர்வு செய்வது நல்லது.

இன்வெர்ட்டருக்கு அதிக டிமாண்ட் நிலவும் இச்சமயத்தில் இன்வெர்ட்டருக்கான பேட்டரி என்று சொல்லி,வேறு ஏதாவது ஒரு பேட்டரியை நம் தலையில் கட்டிவிட வாய்ப்பிருக்கிறது. எனவே, கவனமாக இருப்பது அவசியம். 

நீண்ட காலமாக இன்வெர்ட்டர் தயாரித்து வரும் நிறுவனங்களின் இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரிகளை வாங்கலாம். 

இன்வெர்ட்டர் வாங்கும் போது அந்த நிறுவனத்தின் சர்வீஸ் எப்படி இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

இன்வெர்ட்டர் பற்றிய அடிப்படை விஷயங்களைச் சொல்லிவிட்டோம்.இனி இதை பின்பற்ற வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்!

 


Thanks ,tutyonline