Home » Press News
வழிகாட்டி
» செய்திகள் » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பொறியியல் கல்லூரி செல்லும் மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டி நிகழ்ச்சி
வெள்ளி 22, ஏப்ரல் 2011 12:15:48 PM (IST)
தூத்துக்குடி ஆர்.கே. அகாடமி சார்பில் 12ம் வகுப்பு முடித்துவிட்டு பொறியியல் கல்லூரி செல்ல இருக்கும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இது குறித்து ஆர்கே அகாடமியின் நிர்வாக இயக்குநர் கூறுகையில், +2 முடித்து பொறியியல் கல்லூரிகளில் சேர இருக்கும் மாணவ, மாணவியர்களுக்கான கல்வி ஆலோசனை நேரம் சத்யா டிவியில் இன்று முதல் தினந்தோறும் மாலை 3.30மணி முதல் 4மணி வரை மற்றும் இரவு 10 மணி முதல் 10.30 வரை ஒளிபரப்பாக உள்ளது.
அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் விருது பெற்ற மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் நம்பிக்கை மணியன் இந்த ஆலோசனைகளை வழங்குகிறார். இதில், கல்வி ஆலோசனை மட்டுமின்றி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, தொழிற் பயிற்சி பற்றிய ஆலோசனைகளையும் வழங்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள், இளைஞர்கள் பயன் பெறலாம் என்று தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு தூத்துக்குடி தேவர்புரம் ரோட்டில் உள்ள ஆர்கே அகாடமி, (கிரேஸ் ஆஸ்பிடல் காம்ப்ளக்ஸ் 2வது தளம்) என்ற முகவரியில் நேரிலும் 0461 4200017 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: டூட்டி ஆன்லைன்.