Welcome to Berny Cabs
தூத்துக்குடியில் பெர்னி கேப்ஸ் திறப்புவிழா
தூத்துக்குடியில் பெர்னி கேப்ஸ் என்ற பெயரில் புதிய டிராவல்ஸ் நிறுவனத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி, ராமையா லாட்ஜ் பின்புறம் உள்ள ஹாங்காங் பிளாசாவில் பெர்னி கேப்ஸ் என்ற பெயரில் புதியதாக டிராவல்ஸ் நிறுவனம் துவங்கப்பட்டது. இதன் திறப்புவிழா நேற்று நடந்தது. பென்ரி கேப்ஸ் நிறுவனத்தை ஒய்வு பெற்ற கனரா வங்கி மேலாளர் ஜோசப் லோபஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதனையடுத்து சின்னக்கோவில் பங்குத் தந்தை ஆல்வின் பிரார்த்தனை செய்தார். திருமதி சித்ரா கண்ணன், திருமதி ரதி லோபஸ், திருமதி கிரின்ஸில்லா ஷெல்டன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். விழா ஏற்பாடுகளை பெர்னி கேப்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் பலவேச கண்ணன், ஜெ.டிரக்ஸின் லோபஸ் ஆகியோர் செய்திருந்தனர்.